அண்மை காலமாக தமிழ் சினிமா உலகில் டாப் ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாகினாலும் எதிர்பார்த்த பிரம்மாண்ட வசூல் அள்ளவில்லை இதனால் தமிழ் சினிமா அதலபாதாளத்திற்கு சென்றதாக மற்ற மொழி ரசிகர்கள் கிண்டல் கேலியும் செய்தனர்.
இந்த சமயம் பார்த்து இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உலகநாயகன் கமலஹாசன்னுக்கு விக்ரம் படத்தின் கதையை கூற.. அது கமலுக்கு ரொம்ப பிடித்துப்போகவே படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் செய்தார் படம் ஒருவழியாக ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் படம் ரிலீசாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.
படம் சிறப்பாக ஓட காரணம் ஒரு பக்கம் கதைகளும் மற்றும் கதை ஏற்றவாறு நடிகர்களை தேர்வு செய்தது தான் என கூறப்படுகிறது. விக்ரம் திரைப்படத்தில் கமலுடன் இணைந்து பகத் பாசில், விஜய்சேதுபதி, சூர்யா, நரேன், ஏஜென்ட் டினா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தி இருந்தது.
விக்ரம் திரைப்படம் தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற இடங்களிலும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ருத்ர தாண்டவம் ஆடுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 350 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன குறிப்பாக தமிழகத்தில் மட்டுமே..
பிரமாண்ட வசூலை அள்ளி மீண்டும் தான் யார் என்பதை கமல் நிரூபித்துள்ளார் இதுவரை தமிழகத்தில் மட்டும் கமலின் விக்ரம் படம் சுமார் 152 கோடி வசூலை அள்ளி சாதனைப் படைக்கு உள்ளது அண்மையில் வெளிவந்த எந்த டாப் ஹீரோ திரைப்படங்கள் எதுவும் தமிழகத்தில் 150 கோடி வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.