தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராகவும் சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா இவரை போலவே அவரது மனைவியும் ஜோதிகா அவர்களும் சமூக அக்கறை கொண்டவராக இருந்து வருகிறார் இருவரும் மக்கள் மற்றும் ரசிகர்களுக்காக பல நற்செயல்களை செய்து கொண்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக நடிகர் சூர்யா அவர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து கொண்டு மக்களுக்கு இவ்வாறு நல்ல பணிகளை செய்து வருகிறார் அதிலும் குறிப்பாக கொரோனா காலத்தில் பல ஏழை எளியவர்களுக்கு உணவு அளித்து தன்னால் முடிந்ததை செய்து வருகிறார்.
இப்படி ஒரு பக்கம் சமூக அக்கறை பணியாற்றி வருகிறார்.அதுபோல தான் சினிமாவிலும் சமூக அக்கறை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து மக்களுக்கு விழிப்புணர்வை கொடுத்து வருகிறார் தற்போது இவர் சூரரை போற்று என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இத்திரைப்படம் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் தற்போது இருந்து வருகிறது.வெள்ளித்திரையில் நடித்தது வரும் நடிகர் சூர்யாவை பற்றிய அறியாத சில விசயங்களை நாம் பார்க்க உள்ளோம் அதில் ஒன்றுதான் அவரின் சொத்து மதிப்பு இதோ முழு விவரம்.
நடிகர் சூர்யா அவர்கள் பயன்படுத்தும் கார்களான பிஎம்டபிள்யூ ,ஆடி சீரியஸ், ஜாகுவார் என மொத்தம் மூன்று கார்கள் உள்ளது அவற்றின் மதிப்பு சுமார் 18 கோடி இருக்கும் என தெரிய வருகிறது.
சூர்யா ஒரு படத்துக்காக வாங்கும் சம்பளம் 25 கோடி, இவர் இருக்கும் சொந்த வீட்டின் சொத்து மதிப்பு 16 லிருந்து 18 கோடி இருக்குமாம்.
மேலும் இவர் சினிமா உலகில் தயாரிப்பாளராகவும் வெற்றி கண்டு வருகிறார் அப்படிப்பார்த்தால் இவரின் சொத்து மதிப்பு சுமார் 250 கோடி இருக்கும் என தெரிய வருகிறது இவை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை ஆனால் பிரபல தளங்களில் இருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.