இயக்குனர் மணிரத்தினம் தமிழில் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் அதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த மாதம் 30 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. தற்போது வரை திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் கிட்டத்தட்ட 200 கோடிக்கு மேல் தமிழகத்தில் வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுவும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி ஐந்தே நாட்களில் 250 கோடி வரைச வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிஅமோக வரவேற்பை பெற்று வருகிறது அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்கள் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன்.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அது மட்டும் அல்லாமல் வசூலில் பல சாதனைகளையும் படைத்து வருகிறது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொன்னின் செல்வன் படம் இயக்குனர் மணிரத்தினம் அவர்களுக்கு இந்த படுத்திருக்காங்க எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளீர்கள் என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்டிருக்கிறது அதற்கு இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் படத்தில் வரும் லாபத்தில் எனக்கான ஊழியத்தை கொடுக்க உள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது வரை 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக ஒரு தகவல் இருக்கையில் இயக்குனர் மணிரத்தினம் அவர்களுக்கு சம்பளம் எவ்வளவு கோடி வரும் என எதிர்பார்க்கவே முடியலை அந்த அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வசூல் எகிரி கொண்டே உள்ளது.
ஆனால் இது பற்றி எந்த ஒரு தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.