தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்நிலையில் வாரிசு திரைப்படத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் திரைப்பிரபலங்கள் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருந்து வரும் தளபதி விஜய் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும் எப்பொழுதும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை கண்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் பீஸ்ட் கலவை விமர்சனத்தை பெற்ற இந்த திரைப்படம் நல்ல வசூல் வேட்டையை பெற்றது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை முதன்முறையாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்த படம் குடும்ப செண்டிமெண்ட்டை அடிப்படையாக வைத்து ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது இந்நிலையில் சில மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
விரைவில் முடிய இருப்பதாக கூறப்படுகிறது மேலும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது எனவே தற்போது பட குழுவினர்கள் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் மேலும் குஷ்பூ, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், சங்கீதா, சம்யுக்தா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் விஜயின் வாரிசு திரைப்படம் மோத உள்ளது இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடிப்பதற்காக விஜய் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது பற்றி தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தில் நடிப்பதற்காக 125 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் இவர் கடைசியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடிப்பதற்காக 80 கோடி சம்பளம் பெற்ற நிலையில் தற்போது 45 கோடி அதிகமாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சினை ஏற்படுத்தியுள்ளது.