டாப் நடிகைகளுக்கு இணையாக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் தமன் எவ்வளவு கோடி தெரியுமா.? வெளிவந்த சூப்பர் தகவல்.

thaman
thaman

சினிமாவுலகில் நடிகராக அறிமுகமாகி பின் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தவர் தமன் இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவான “பாய்ஸ்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன்பின் ஷங்கர் தயாரித்த “ஈரம்” படத்தின் மூலம் இசையமைப்பாளராக என்ட்ரி கொடுத்தார்.

தமிழில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து வந்த இவர் ஒரு கட்டத்தில் தெலுங்கு பக்கம் போனார் அங்கு டாப் நடிகர்கள் தொடங்கி புதுமுக நடிகர்கள் வரை பலருக்கும் சிறந்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமைத்து தனது திறமையை வெளிப்படுத்தினால் அங்கேயே நிரந்தர இடத்தை பிடித்தார்.

இருப்பினும் அவ்வப்போது தமிழ் சினிமா பக்கம் வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் எனக்கு அஜித் படத்தில் பணிபுரிய ஆசை வெகு விரைவிலேயே பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார் மேலும் எனக்கு பிடித்த நபர் அஜித் எனவும் அவர் கூறினார். இப்படி இருக்கின்ற நிலையில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் 66வது திரைப்படத்தில் இவர் தான் இசையமைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சங்கர் – ராம் சரண் இணையும் புதிய படத்திலும் தற்போது தமன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமன் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே இணைந்து நடித்த திரைப்படம் வைகுண்டபுரம்லு வரும் முட்டபொம்மா பாடலுக்கு இசையமைத்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது அந்த பாடல் மிகப் பெரிய அளவில் ரீச் ஆனதை தொடர்ந்து தமனுக்கு மார்க்கெட்டும தாறுமாறாக எகிறி இருக்கிறது.

தற்போது தமன் ஒரு திரைப்படத்திற்கு சுமார் 2.5 லிருந்து 3.5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தெரியவந்துள்ளது தமன் தனக்கு மட்டும் வாங்காமல் தன்னுடன் பணிபுரியும் சவுண்ட் இன்ஜினியர், மியூசிக் இன்ஜினியர் இன்ஸ்ட்ருமெண்ட் பிளேயர்ஸ் ஆகியோர்கள் சேர்த்து வாங்குகிறார். டாப் நடிகைகளுக்கு நிகராக இவரும் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.