தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அதேபோல் முன்னணி நடிகர்களின் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றாலே திரையரங்கம் திருவிழா போல் காட்சியளிக்கும் அந்த அளவு ரசிகர்கள் தங்களது மனதிற்கு பிடித்த முன்னணி நடிகர்களின் படங்களை விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.
இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்கிற்கு வந்த திரைப்படம் தான் வலிமை இந்த திரைப்படத்தில் அஜித், ஹீமா குரோஷி, கார்த்திகேயா, புகழ் எனப் பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும் இந்த திரைப்படத்தை வினோத் அவர்கள் இயக்கியிருந்தார் அதுமட்டுமில்லாமல் படத்தை பிரம்மாண்டமாக போனிகபூர் அவர்கள் தயாரித்திருந்தார்.
ஒரு சிலரிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற வலிமை வசூலில் எந்த குறையும் இல்லாமல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில் வலிமை திரைப்படத்தை பற்றி ப்ளூ சட்டை மாறன் மிகவும் மோசமாக விமர்சித்த அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல நடிகர் மற்றும் நடிகைகள் ப்ளூ சட்டை மாறனை கிழித்து தொங்க விட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்பொழுது அஜித் 61வது திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார் இந்தநிலையில் அறுபத்தி ஒன்னாவது திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கப் போகிறார் என தகவல் கிடைத்துள்ளது அதாவது வில்லன் அஜித் தான் அதேபோல் ஹீரோவும் அஜித் தான் என படத்தின் இயக்குனர் வினோத் கூரியுள்ளார் இதனால் அஜித் இந்த திரைப்படத்தில் டபுள் ரோலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் வலிமை திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது இந்த நிலையில் தற்போது வரை வலிமை திரைப்படம் 197 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது அதிலும் தமிழ்நாட்டில் மட்டும் 136 கோடி வசூலித்துள்ளது. இந்த நிலையில் வலிமை திரைப்படம் விரைவில் 200 கோடி கிளப்பில் இணைந்து விடும் என்பதால் அஜித் ரசிகர்கள் டிரெண்டிங்கில் கொண்டு வருகிறார்கள்.