இன்ஸ்டாகிராமில் மட்டுமே பல கோடி சம்பாதிக்கும் நடிகை சமந்தா.! ஒரு மாதத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

samantha-
samantha-

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வருபவர் சமந்தா.  இவர் தொடர்ந்து சினிமா உலகில் முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் கிளாமர் கதாபாத்திரங்களிலும் நடித்து வெற்றி கண்டு வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரை படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்து அசத்தினார்.

அதுபோல தெலுங்கில் புஷ்பா திரைப்படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.  இதனால் தொடர்ந்து நடிகை சமந்தாவின் சினிமா பயணம் உயர்ந்து கொண்டே செல்கிறது இப்பொழுது கூட இவரது கையில் சகுந்தலம், யசோதா என இரு படங்களில் இருக்கின்றன.

இரண்டிலும் தற்போது தீவிரமாக நடித்து வருகிறார் சமந்தா இது இப்படி இருந்தாலும் சினிமா நேரம்போக நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியிடுவதுமாக  இருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவது, பதிவை போடுவதுமாக இருப்பதால் சமூக வலைதள பக்கங்களில் நடிகை சமந்தாவை பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில்  விளம்பர பொருள்களையும் வைத்து போஸ் கொடுப்பதால் அந்த பொருள் மிகப்பெரிய அளவில் விளம்பரம் ஆகிறது.

இதனால் சமந்தாவிற்கு நல்ல வருமானம் கிடைக்கிறதாம் ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. படத்தில் வரும் காசை விட அசால்டாக ஒரு மாசத்தில் விளம்பரங்களின் மூலமாகவே 3 கோடி  வாங்கி வருவது மிகப்பெரிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.