சம்பள விஷயத்தில் தனுஷை ஓவர்டேக் செய்யும் நடிகர் சிவகார்த்திகேயன் – டான் படத்திற்கு எத்தனை கோடி கேட்டுயுள்ளார் தெரியுமா.? விழிபிதுங்கும் தயாரிப்பாளர்.

dhanush-and-sivakarthikeyan
dhanush-and-sivakarthikeyan-7866

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் தான் ஒவ்வொரு படமும் ஹிட் அடிக்கும் போதும் தனது சம்பளத்தை உயர்த்துவார்கள் ஆனால் தற்போது வளர்ந்து வரும் ஹீரோக்கள் கூட ஒரு படம் ஹிட்டடித்தாலும் அல்லது அந்த படம் நல்ல வரவேற்பை வெளிவருவதற்கு முன்பே மக்கள் மத்தியில் அதிகரித்தாலோ உடனடியாக தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவுலகில் காமெடி கலந்த திரைப்படங்களில் நடித்து பின் படிப்படியாக ஆக்ஷன் கலந்த படங்களில் நடித்து வருவதால் அவரது ஒவ்வொரு படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் சிறப்பாகவே இருந்து வந்துள்ளன.

மேலும் அந்த திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெறுகின்றன. இதனால் சிவகார்த்திகேயன் தற்பொழுது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தனது சம்பளத்தை யோசிக்காமல் உயர்த்தி வருகிறார் இதனால் தற்போது தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில்  இருக்கின்றனர்.

இவர் இதை ஒரு படத்திற்கு 25 கோடி வாங்கி வருகிறார் அந்த வகையில் டாக்டர் திரைப்படத்திற்கு 25 கோடி தான் அவர் சம்பளம் வாங்கினார். ஆனால் இந்த படம் வெளிவருவதற்கு முன்பாகவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் அடுத்த திரைப்படத்திற்கு தற்போது 35 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.

காரணம் என்ன என கேட்டதற்கு எனது படத்திற்கான வரவேற்பு அதிகரித்து கொண்டே செல்கிறது அதனால் தான் தனது சம்பளத்தை உயர்த்துவதாக மறைமுகமாக அவர் சொல்கிறாராம். மேலும் அடுத்ததாக நடிக்க போகின்ற படங்களுக்கும் இவர் 35 கோடி அல்லது அதற்குமேல் உயர்த்தினாலும் உயர்த்துவார் என கூறுகின்றனர்.

இவரைப் போலவே நடிகர் தனுஷும் தற்பொழுது ஒரு இடம் கொடுத்து விட்டால் அவரும் தனது சம்பளத்தை யோசிக்காமல் உயர்த்துகிறார் இதனால் தமிழ் சினிமாவில் தற்போது சம்பளத்தை உயர்த்தும் நடிகர்கள்தான் அதிகமாக இருக்கின்றன ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. பெட்ரோல் விலையை எப்படி ஏறுகிறதோ அதைவிட நடிகர்கள் ஒரு படத்தை ஹிட் படமாக கொடுத்து விட்டால் தனது சம்பளத்தை ஏற்றிக் கொண்டே செய்கின்றனர்.