1970ஆம் ஆண்டில் எத்தனை நடிகர்கள் அறிமுகமானார்கள் தெரியுமா.? அட நம்ம தலைவரும் அப்போதானா இதோ முழு லிஸ்ட்.!

vijayakanth
vijayakanth

தற்பொழுது பல நடிகர்கள் திரையுலகில் கலக்கி வருகின்றனர். இந்த நிலையில் 1970ஆம் ஆண்டில் அறிமுகமான நடிகர் யார்? யார்? என்று தற்போது காண்போம். அந்த வகையில் முதலில்,

விஜயகுமார் – நடிகர் விஜயகுமார் 1973இல் பொண்ணுக்கு தங்க மனசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் – நடிகர் கமல்ஹாசன் 1973இல் அரங்கேற்றம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.

ரஜினிகாந்த் – நடிகர் ரஜினிகாந்த் 1975இல் அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். இவர் நடித்த முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது என தான் கூறவேண்டும் ஏனென்றால் இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடி திரையுலகில் ஒரு சாதனை படைத்தது.

சத்யராஜ் – நடிகர் சத்யராஜ் 1978ல் சட்டம் என் கையில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.

சரத்பாபு – நடிகர் சரத் பாபு 1978ல் நிழல் நிஜமாகிறது திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகராக அறிமுகமானார்.

சுதாகர் – நடிகர் சுதாகர் 1978ல் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.

விஜயன் – நடிகர் விஜயன் 1978ல் கிழக்கே போகும் ரயிலில் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.

பாக்யராஜ் – நடிகர் பாக்கியராஜ் 1979இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான புதியவார்ப்புகள் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

ராஜேஷ் – நடிகர் ராஜேஷ் 1979இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான கண்ணிப்பருவத்திலே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

பிரதாப் – நடிகர் பிரதாப் 1979இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அழியாத கோலங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

விஜயகாந்த் – நடிகர் விஜயகாந்த் 1979இல் அகல்விளக்கு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.