தமிழில் அஜீத் நடிப்பில் வெளியான காதல் கோட்டை என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கியவர் தான் தேவயானி இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பு மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தமிழில் அஜித்துடன் இணைந்து நடித்தபோது அவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தேவயானி அஜித்,விஜய்,கமல் ஹாசன்,கார்த்தி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கி கொண்டார்.
இவ்வாறு பிரபலமடைந்த தேவயானி கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜ் குமாரனை காதலித்து மணம் முடித்துக் கொண்டார் மேலும் தற்போது அவர் சின்னத்திரையில் சீரியல்கள் விளம்பரங்கள் போன்றதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
தேவயானி சினிமாவில் படு பிசியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக ரசிகர்களிடையே வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம் அவ்வாறு வெளிவரும் புகை படத்திற்கும் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் தேவயானி தனது கணவருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் தற்போது வெளியாகி காட்டுத்தீ போல் ரசிகர்களிடையே பரவி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தேவயானி காதல் கோட்டை திரைப்படத்தில் பார்த்த பொழுது எப்படி இருந்தீங்களோ அப்படித்தான் இருக்கிறார்கள் என ஐஸ் வைத்து வருகிறார்கள்.