நடிகர் விஜய் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் சினிமாவை ரசித்து நடித்து வருவதால் அவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்துப் போன திரைப்படங்களாகவே இன்று வரை அமைந்துள்ளன சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு அதிக ஹிட் படங்களை கொடுத்த நடிகர்களில் ஒருவராக தளபதி விஜய் இருக்கிறார்.
தளபதி விஜய் நடிப்பில் சமீப காலமாக வெளியான மெர்சல், தெறி, மாஸ்டர் ஆகிய அனைத்து படங்களுமே ப்ளாக்பஸ்டர் ஹிட் தான் மேலும் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியது. இந்த திரைப்படங்களை தொடர்ந்து தளபதி விஜய் நெல்சன் திலிப்குமார் உடன் முதல் முறையாக கைகோர்த்து “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது இருப்பினும் இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் தான் வெளியாகும் என தெரியவந்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி விஜயுடன் படத்தில் நடித்த லல்லு என்பவர் விஜயிடம் ஒரு கேள்வியை கேட்டு அதிர வைத்துள்ளார்.
அவர் கேட்டது : இப்பொழுது உங்களின் படங்களின் விமர்சனங்களை நீங்கள் டிவி அல்லது போன்களின் மூலம் பார்த்து கண்டுகளித்து கொள்கிறீர்கள் அந்த அளவிற்கு youtube, facebook, twitter ஆகியவை இருக்கின்ற இது இல்லாத காலகட்டத்தில் நீங்கள் எப்படி உங்களின் படங்கள் விமர்சனங்களை தெரிந்து கொள்கிறீர்கள் என கேட்டுள்ளார் அதற்கு பதிலளித்த தளபதி விஜய்.
எனது படங்கள் ரிலீஸ் ஆகும் போது எனது நண்பர்களை திரையரங்குக்கு போய் பார்க்க சொல்வேன் அவர்களின் படத்தை பார்க்கும் போது எனக்கு கால் செய்து விடுவார்கள் நானும் காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு படத்தில் வரும் சீன்கள் சொல்லுவார்கள் ரசிகர்கள் கை தட்டுகிறார்களா இல்லையா என்பதை கேட்டுக்கொள்வேன். படத்தை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஒரு மாதிரியாக கூறுவார்கள் உடனே நான் போனை ஆப் செய்து விட்டு படுத்து தூங்கி விடுவேன் என தளபதி விஜய் கூறியுள்ளார்.