Janagaraj : நடிகர் ஜனகராஜ் தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாகவும் குணசத்திர நடிகராகவும் வலம் வந்தவர் இந்த நிலையில் தன்னை பற்றிய தவறான வதந்திகள் பரவுவது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜனகராஜ் பேசியுள்ளார்.
கவுண்டமணி, செந்தில் காமெடியில் கலக்கி கொண்டு இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இணையாக காமெடியில் அசத்தி தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் நடிகர் ஜனகராஜ் 1978 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் ஜனகராஜ் அறிமுகமானார்.
தான் நடித்த முதல் திரைப்படமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருந்த ரஜினி, கமல் வளர்ந்து வரும் நடிகர்களாக நடிக்க வந்த நடிகர்கள் வரை அனைவரின் திரைப்படத்திலும் ஜனகராஜ் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் ஜனகராஜ்.
80 காலகட்டத்தில் இருந்து 90 கால கட்டம் வரை இடைவிடாது பல திரைப்படங்களில் காமெடியனாகவும் குணசத்திர வேடத்திலும் நடித்து புகழ்பெற்று வந்தவர் ஒரு காலகட்டத்தில் இவருக்கு பெரிதாக பட வாய்ப்பு கிடைக்காததால் ஜனகராஜ் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் என தகவல் கிடைத்தது. ஆனால் தற்பொழுது ஜனகராஜ் சென்னையில் தான் இருந்து வருகிறார் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜனகராஜ் இதுகுறித்து பேசினார். அதாவது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார் என பலரும் கூறி வருகிறார்கள் ஆனால் நான் அமெரிக்கா போனதே கிடையாது உண்மையை சொல்லு வேண்டும் என்றால் எனக்கு விசாவே கிடையாது போகாத ஒரு நாட்டுக்கு நான் போனதாக கூறுகிறார்கள் இது பற்றி நான் எத்தனை பேருக்கு புரிய வைக்க முடியும்.
அதுமட்டுமில்லாமல் நான் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டதாக கூறியதால் எனக்கு கிடைக்க வேண்டிய சினிமா வாய்ப்பு கூட கிடைக்கவில்லை அது மட்டும் இல்லாமல் உடல்நிலை சரியில்லை என கூறினார்கள் அப்பொழுது ரஜினி என்னை வந்து பார்த்ததாகவும் சிலர் சொல்கிறார்கள் இதெல்லாம் எப்பொழுது நடந்தது என்று எனக்கு தெரியவில்லை கொரோனா வந்ததிலிருந்து எனக்கு ஒரே மன அழுத்தம் மன உளைச்சல் தான் ஆனால் கொரோனா முடிந்த பிறகும் எனக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இப்பொழுது என்னால் நான் சிரிக்கும் சிரிப்பை சிரிக்க முடியாது ஆனால் நடிக்கும் போது அந்த சிரிப்பு தானாக வந்துவிடும் அது மட்டும் இல்லாமல் டெய்லியும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதாகவும் 90 கிலோவில் இருந்த நான் தற்பொழுது 64 கிலோவாக குறைத்து இருக்கிறேன் என் மனைவி தான் என்னை ரொம்பவும் நன்றாக பார்த்துக் கொள்கிறார் என ஜனகராஜ் கூறியுள்ளார் அதேபோல் என் மகனும் பார்த்துக் கொள்கிறான் எனவும் கூறியுள்ளார்.