நடிகர் ரஜினிக்கும் லதாவுக்கும் எப்படி காதல் வந்தது தெரியுமா.? அதுவும் வேற லெவல் கதை தான்.!

rajini
rajini

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் இருந்து தற்போது வரை நடிக்கும் பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகி கொண்டே போகிறது அதற்கு முக்கிய காரணம் இவரது விடா முயற்சியினால் தான். தற்போது இவருக்கு வயது ஆனாலும் திரைப்படம் என்று வந்து விட்டால் இளமையில் எப்படி நடித்தாரோ அதேபோல் நடிக்க தொடங்கி விடுவார்.

மேலும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றுவிட்டது இவரது திருமண வாழ்க்கையில் லதா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான் அதிலும் இவருக்கு காதல் திருமணம் என்பதால் இவரது ரசிகர்களும் இவருக்கு நல்ல வரவேற்பு தந்தார்கள் கடந்த 1981-ஆம் ஆண்டு ரஜினிக்கு காதல் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இவரது காதல் கதை எப்படி உருவானது என்பது பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம் அதாவது இயக்குனர் மகேந்திரனின் உறவினர் தான் லதா மகேந்திரனிடம் லதா ரஜினியை பேட்டி எடுக்க முடியுமா என வாய்ப்பு கேட்டுள்ளார் அதற்கு இயக்குனர் மகேந்திரனும் ரஜினியை பேட்டி எடுக்க அனுமதி வாங்கி தந்துள்ளார்.

அப்பொழுது ரஜினியிடம் சென்றபொழுது ரஜினி லதாவைப் பார்த்த உடனே காதலில் விழுந்து விட்டாராம் பின்பு ரஜினி மற்றும் லதா ஆகிய இருவரும் காதலிக்க ஆரம்பித்து விட்டார்களாம் அதற்கு பின்பு தனது குருவான கே பாலச்சந்தர் அவர்களிடம் லதாவை அழைத்துக்கொண்டு ரஜினி சென்றுள்ளார்.

rajini
rajini

அப்பொழுது ரஜினியை பார்த்து கே பாலச்சந்தர் அவர்கள் இனிமேல் தான் உனக்கு மிகப்பெரிய பொறுப்பு வர போகுது எனக் கூறி இருவரையும் வாழ்த்தியுள்ளார் ஆம் இப்படிதான் ரஜினியின் காதல் கதை உருவாகியுள்ளது என இந்த தகவல் சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.