தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் நடிகர்கள் பலரும் NO.1 இடத்தை பிடிக்க படாத பாடுபடுகின்றனர். ஆனால் அந்த இடத்தை பிடிக்க தற்பொழுது ஓடிக்கொண்டு இருப்பவர் தளபதி விஜய்.
மாஸ்டர் திரைப்படத்தின் அதிரிபுதிரி ஆன வெற்றியை தொடர்ந்து தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் வேற லெவெலில் எடுத்து வருகிறார். விஜயின் சர்க்கார் திரைப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் விஜயுடன் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது.
தளபதி 65 படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கிற்காக படக்குழு சென்னை வந்தது ஆனால் இங்கு நடக்கின்ற சூழல் சரியில்லாததால் தற்போது கைவிட்டுள்ளது. இருப்பினும் விஜய் பற்றியும் விஜயின் 65 படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்தன.
இந்த நிலையில் தளபதி விஜய்க்கு மிகவும் பிடித்த திரைப்படம் பற்றிய செய்தி ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் மிகவும் பிடித்த திரைப்படம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான அண்ணாமலை திரைப்படம் தானாம்.
இளம் வயதில் விஜய் இந்தப் படத்தின் டயலாக் மற்றும் வசனங்களை பேசி பலமுறை நடித்துள்ளாராம். மேலும் தனது தந்தையிடம் போய் இந்த படத்தின் வசனம் மற்றும் டயலாக்கை தான் முதலில் நடித்தும் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.