முன்னணி நடிகைகளின் திருமணம் குறித்து பலருக்கும் தெரியும் ஆனால் அவர்கள் எந்த வயதில் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்து வருகிறது. அவர்கள் எந்த வயதில் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
நடிகை ஜோதிகா இவர் காக்க காக்க திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் சூர்யாவை காதலித்து வந்தார் அதன் பிறகு 2006ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சூர்யா ஜோதிகா திருமணம் செய்தபோது ஜோதிகாவின் வயது 29 ஆக இருந்தது.
காஜல் அகர்வால் இவர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்துள்ளார். மேலும் தன்னுடைய காதலரான கௌதம் கிட்ச்லு என்பவரை நீண்ட ஆண்டுகளுக்கு கழித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. மேலும் நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்ட போது அவருக்கு 35 வயது ஆகியிருந்தது.
பாலிவுட்,தமிழ் தெலுங்கு என பன்முக மொழிகளில் ஒரு கலக்கு கலக்கியவர் தான் நடிகை ஸ்ரேயா சரண் இவர் ரஷ்யாவை சேர்ந்த ஆன்ட்டி கோஷீவ் என்பவரை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு திருமணம் ஆகும்போது இவருக்கு 36 வயது ஆனது.
ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நஸ்ரியா. இவர் மலையாள உலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் பகத் பாசிலை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அப்போது நஸ்ரியாவுக்கு வெறும் 19 வயது ஆனது.
சந்தோஷ் மற்றும் ஜெயக்குமார் இயக்கிய கஜினிகாந்த் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சாய்ஷாவிற்கு ஆர்யா மீது காதல் மலர்ந்தது. அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சாயிஷாவிற்கு திருமணம் நடந்தபோது அவருக்கு 21 வயது ஆகி இருந்தது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா இவர் 30 வயதில் கோலிவுட் முன்னணி நடிகரான நாக சைதன்யாவை கரம் பிடித்தார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
டார்லிங் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை நிக்கி கல்ராணி அவர்கள் மரகத நாணயம் திரைப்படத்தின் நடிகர் ஆதியை காதலித்து வந்துள்ளார் பின்னர் இவர்களுக்கு சமீபத்தில் உறவினர்கள் மத்தியில் திருமணமானது. நிக்கிக்கு திருமணம் ஆகும்போது அவருடைய வயது 30.
தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவார் நடிகை நயன்தாரா இவர் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனை கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்தார். பின்னர் சென்னையில் ஒரு ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்தின் போது நயன்தாராவின் வயது 37.