TRP – யில் செம்ம மாஸ் காட்டும் விஜய் டிவி சீரியல் எது தெரியுமா.? அதுதான் இப்ப NO. 1.

விஜய் டிவி பல சூப்பர் ஹிட் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை  கொடுத்து வருகின்றன. அதில் டாப் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடர் குடும்பங்கள் கொண்டாடும் சிறந்த சீரியலாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

இந்த சீரியலில் ஒரு குடும்ப பெண் அவர் படும் கஷ்டம் மற்றும் அவரை மதிக்காத குடும்பத்தினர் சிலர் போன்றவற்றை மையமாக வைத்து இந்த கதை உருவாகி வருகிறது.  இந்த தொடரில் நடித்து வரும் எழில் மற்றும்  அமிர்தாவிற்கு சமூக வலைதளங்களில் பல ரசிகர்கள் கூட்டம் உள்ளன.

இப்படி போய்க் கொண்டிருந்த கதையில் சில திருப்பங்கள் வருகின்றன தற்பொழுது கொஞ்சம் விறுவிறுப்புடன் ஓடுகிறது. இந்த தொடரில் சமீபத்தில் கூட ராதிகா கதாபாத்திரத்திற்கு பதில்  பிக் பாஸ் சீசன் 4யில் கலந்துகொண்ட ரேஷ்மா  நடித்து வருகிறார்.

தற்போது இந்த கதையில்  கோபி எப்பொழுது அவர் குடும்பத்தினரிடம் சிக்குவார் மற்றும் அவர் செய்யும் தவறு எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ ஒன்றில் கோபி தன் மனைவியுடன் கொஞ்சி விளையாண்டு கொண்டு இருக்கும் காட்சியை ராதிகா பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுபோன்ற திருப்பங்களுடன் இந்த சீரியல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி யில் புதிய சாதனை படைத்துள்ளது. அது என்னவென்றால் பாக்கியலட்சுமி சீரியல் கடந்தவார டி ஆர் பி யில் விஜய் டிவியில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த சந்தோச செய்தியை பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் அனைவரும்  கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version