சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மனதை அப்பொழுதே வென்று அசத்தியவர் டி ராஜேந்திரனின் மகன் சிம்பு அதன்பின் ஒரு குறிப்பிட்ட பருவ வயதை எட்டிய பின் சினிமா உலகில் ஹீரோவாக அறிமுகமானார் அதன் பின் தனது திறமையை மென்மேலும் வளர்த்துக் கொண்டார் இப்பொழுது அவர் இயக்குனராகவும், பாடகராகவும், நடன கலைஞராகவும் சினிமா உலகில் பயணித்து வருகிறார்.
இப்படி இருந்தாலும் அவருடைய பிரதானம் நடிப்பு என்பதால் அதையே பெரிதும் கவனம் செலுத்தி வருகிறார் சமீப காலமாக இவரது படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு தற்போது தொடர்ந்து படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் அந்த வகையில் சிம்பு கையில் மாநாடு, பத்து தல, வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
வருகின்ற 25 ஆம் தேதி சிம்புவின் மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இதனை முன்னிஇட்டு ப்ரொமோஷன் வேலையில் சிம்பு களமிறங்கியுள்ளார் தமிழில் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பாக பேசி முடித்த நிலையில் அடுத்ததாக தெலுங்கு நிகழ்ச்சி நேர்காணல் ஒன்றில் சிம்பு கலந்துகொண்டார்.
அப்போது பல சுவாரஸ்யமாக பேசி வந்த சிம்பு எப்படி குண்டாக இருந்த நீங்கள் இவ்வளவு அதிரடியாக உடம்பை குறித்து என கேட்டனர் அதற்கு நான் அந்த காலகட்டத்தில் சுமார் 27 கிலோ உடல் எடையை குறைப்பதாக கூறினார் மேலும் அதற்கான என்னென்ன உணவுகளை எடுத்துக் கொண்டார் என்பதையும் கூறி உள்ளார்.
அவர் இரண்டு மாதங்களாக நீர் ஆகாரம் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டதாகவும் solid உணவு வகைகளை உட்கொள்ள வில்லை என்றும் பல சிரமங்களை தாண்டி வந்தால் தான் இங்கே இந்த இடத்தில் இப்படி ஒரு தோற்றத்தில் தான் இருப்பதாக தெரிவித்திருந்தார் சிம்பு.