தமிழ் சினிமாவில் ஒரு சில கூட்டணி வெற்றி கூட்டணியாக அமைந்திருக்கும் அந்த வகையில் நடிகர் சந்தானமும், சிம்புவும் ஒரு சுமாரான படத்தில் நடித்தால் கூட அந்த திரைப்படம் வேற லெவல் ஹிட்டடிக்கும் அப்படி பல திரைப்படங்கள் ஹிட் அடித்து இருந்து வந்துள்ளன.
ஆனால் சமீபகாலமாக நடிகர் சந்தானம் சோலோ ஹீரோவாக பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருவதால் எந்த ஒரு டாப் நடிகரின் படத்திலும் காமெடியனாக நடிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது இவர் சிம்புவுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிகின்றன.
அந்த வகையில் இவர் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் என்பவர் சந்தானம் மற்றும் சிம்பு ஆகியோரில் வைத்து ஒரு புதிய படத்தை எடுப்பது உறுதியாகி உள்ளது.
இந்த படத்திற்கு “கொரோனா குமார்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது படம் முழுக்க முழுக்க காமெடி இருக்கும் என்பதால் இந்த படத்தை தற்போது ரசிகர்கள் கொண்டாட ஆவலுடன் இருக்கின்றனர்.
சந்தானம் சும்மாவே கெத்து காட்டுவார் இப்போ சிம்பு கூட சேர்ந்து விட்டால் மீண்டும் பழைய கலாட்டா காமெடியை இந்த படத்தில் பார்க்க முடியும் என கூறு படுகிறது.