விஜயின் 66வது திரைப்படத்தை தயாரிக்கப் போவது எந்த நிறுவனம் தெரியுமா. சன்பிக்சர்ஸ் மாதிரி இந்த தயாரிப்பு நிறுவனமும் செம்ம பெருசாம்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு தொடர் வெற்றித் திரைப்படங்களை கொடுப்பதோடு அத்தகைய திரைப்படங்கள் வசூல் வேட்டையை நடத்தியதால் தற்போது தமிழ் சினிமாவில் தொடமுடியாத உச்சத்தில் இருக்கிறார் விஜய்.

இவரின் தொடர் படங்கள் ஒவ்வொன்றும் 100 கோடிக்கு மேல்  வசூல் வேட்டை நடத்துகின்றனர் அப்படித்தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படமும் 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது

இதை தொடர்ந்து மீண்டும் சிறப்பான கதைகளை இயக்கி வெற்றி கண்ட நெல்சன் திலிப்குமார் உடன் இணைந்து தனது 65வது திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் போன்ற ஒரு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜயின் 66 -வது திரைப்படத்தை யார் இயக்குகிறார் தயாரிக்கிறார் என்ற செய்தி தற்போது பரவி வருகிறது.

இந்த நிலையில் தளபதி 66வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் (தெலுங்கு) நிறுவனம் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இது இதுவரையிலும் அதிகாரப்பூர்வமாக கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த தயாரிப்பு நிறுவனம் விஜயுடன் கைகோர்த்தால் தெலுங்கு பக்கம் விஜய்க்கு அதிகப்படியான ரசிகர்கள் இன்னும் கூடுவார்கள் என கணிக்கப்படுகிறது.