பொதுவாக ஒரு திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்று விட்டால் அத்திரைப்படத்தை மற்ற மொழியில் ரீமேக் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்தவகையில் சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் தான் திருஷ்யம் 2 இத்திரைப்படம் சமீபத்தில் ஓடிடி வழியாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தமிழில் கமலஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றதால் இத்திரைபடத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக பல மாதங்களாக தகவல் வெளிவந்து கொண்டிருந்தது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பாபநாசம் இரண்டாம் பாகத்தை பற்றிய மாசான அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது.
கமலஹாசன் தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தற்பொழுது பல பிரச்சனைகள் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
இதன் காரணமாக கமல்ஹாசன் பாபநாசம் திரைப்படத்தின் நடிப்பதற்காக 30 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளாராம் எனவே விரைவில் இத்திரைப்படம் தொடங்கும் என்று கூறப்படுகிறது இத்திரைப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி ஸ்ரீபிரியா தயாரிக்க உள்ளார்.
இத்திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக கௌதமிக்கு பதிலாக யார் நடிப்பார் என்ற தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தற்பொழுது கமலஹாசன் மற்றும் கௌதமி இருவரும் பிரிந்து விட்டதால் மலையாளத்தில் திரிஷ்யம் 2 திரைப்படத்தில் நடித்திருந்த மீனாவை கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என்று படக்குழுவினர்கள் கூறி உள்ளார்களாம்.
எனவே ஹீரோயினை முடிவு செய்துவிட்டால் இத்திரைப்படத்தை வெறும் 30 நாட்களுக்குள்ளேயே கமலஹாசன் மொத்தமாக நடித்து முடித்து விடுவாராம். மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததால் தமிழிலும் இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.