அஜித் குமாரின் மகளுக்கு பிடித்த தமிழ் பாடல் எது தெரியுமா.? எந்த ஹீரோ படம் தெரியுமா.?

ajith
ajith

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சூப்பரான படங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருபவர் நடிகர் அஜித்குமார். சமீபத்தில் கூட  இவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ஆக்சன் சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்து இருப்பதால் அனைத்து தரப்பட்ட மக்களையும் திரையரங்கு பக்கம் இழுத்துள்ளது.

இந்த திரைப்படம் ஒரு பக்கம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் இந்த வருடமே ஒரு சூப்பரான படத்தை கொடுக்க நடிகர் அஜீத் மீண்டும் ஒரு முறை  ஹச். வினோத் மற்றும் போனி கபூருடன் இணைந்து தனது 61 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் அஜீத் நடிப்பதாக கூறப்படுகிறது படத்தின் கதைக்கு ஏற்றவாறு தன்னை அதிரடியாக மாற்றிக் கொண்டு உள்ளார் இந்த சமயத்தில் தனது மகன் ஆத்விக் பிறந்தநாளை முன்னிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார் .  இதில் அதிரடியாக உடம்பை குறைத்து செம்மயாக இருக்கும் புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இந்த சமயத்தில் அஜித்தின் மகளுக்கு பிரபல நடிகரின் பாடல் ரொம்ப பிடிக்குமாம் அந்த நடிகர் வேறு யாருமல்ல சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இடம்பெற்றுள்ள ஊதா கலரு ரிப்பன் பாடல் தான் அஜித் மகளுக்கு ரொம்ப பிடித்த பாடலாம் அண்மையில் இதனைத் சிவகார்த்திகேயன்  தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் நான் நடிகர் அஜித் குமாரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அஜித்தின் குடும்பமே என்னை நன்றாக பார்த்து கொண்டனர். அஜித் தனக்கு பல நல்ல விஷயங்களையும் பகிர்ந்து உள்ளார் என நேர்காணல் ஒன்றில் பேசி இருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.