தமிழ் சினிமாவில் தற்போது பல்வேறு திரைப்படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி வருபவர் தான் எஸ் ஜே சூர்யா இவ்வாறு பிரபலமான நமது நடிகர் நடிப்பது மட்டுமின்றி இயக்கத்திலும் மிகச் சிறந்தவர் அந்த வகையில் இவர் பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக சமீபத்தில் எஸ்கே சூர்யாவை பல்வேறு இயக்குனர்களும் வில்லனாக நடிக்க வைத்து அழகு பார்த்து வருகிறார்கள் அந்த வகையில் நமது நடிகர் ஒரு குறிப்பிட்ட இயக்குனர்களிடம் மட்டுமே கதை கேட்டு அவர்களுடைய திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து வருகிறாராம்.
சமீபத்தில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் கூட விஜய் சேதுபதி வில்லனாக நடித்த மிரட்டியிருப்பார் இவ்வாறு அவருடைய நடிப்பைப் பார்த்து பல்வேறு இயக்குனர்களும் அவரிடம் கதையை கூறியது மட்டுமில்லாமல் சரமாரியாக பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து டஜன் கணக்கில் படங்களை வெளியேற்றி வந்தார்.
ஆனால் இவர் கதை தேர்வு செய்வதில் கவனம் இல்லாததன் காரணமாக இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் மாபெரும் தோல்வியை சந்தித்தது இதனால் ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்தது மட்டுமில்லாமல் விஜய் சேதுபதி தற்போது கதையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய்சேதுபதி எப்படியோ அதே போல தான் மாநாடு திரைப்படத்திற்குப் பிறகு எஸ்ஜே சூர்யாவிற்கு வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது ஆனால் கிடைக்கும் வாய்ப்பு அனைத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் இவர் சினிமாவில் முன்னேறுவது கஷ்டம் ஆகையால் விஜய்சேதுபதி போன்று நடந்து கொள்ளாமல் கொஞ்சம் கவனமாக இருந்தால் நல்லது என ரசிகர்கள் அறிவுரை கூறி வருகிறார்கள்.