தமிழ் சினிமாவில் பல்வேறு காதல் மற்றும் வித்தியாசமான படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தன் பெயரை பிரபலப்படுத்தி கொண்டவர் இயக்குனர் செல்வராகவன் தற்போது கூட இவர் தனுஷுடன் கைகோர்த்த நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் என அடுத்தடுத்த படங்களை இயக்கியிருக்கிறார்.
அதற்கு முன்பாக செல்வராகவன் பல்வேறு படங்களில் இவர் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் சாணி காயிதம் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இப்படி தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் இருக்கும் செல்வராகவன்.
சமீப காலமாக மனதில் பாதித்த சில விஷயங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து தனது நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார். அந்த வகையில் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் நாம் தான் காரணம் என்று பழி போட்டுக் கொள்ளாதீர்கள்.
மற்றவர்களின் பாவத்தை நாம் சுமந்தது போதும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மனதை குத்திக் கிழித்து உடைத்து சுக்குநூறாகி போட்ட காதல் ஒன்று இல்லாமல் இருக்காது என முன்பே கூறியிருந்தார் தற்போதுகூட செல்வராகவன் கூற வருவது தயவுசெய்து வேதனை உச்சத்தில் இருக்கும் போது எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள்.
இரண்டு நாள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள் இரண்டு நாட்களுக்கு பிறகு ஒரு பிரச்சனையும் இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.