Mansoor Alikhan : 80, 90 கால கட்டங்களில் பிரபலமான வில்லனாக பார்க்கப்பட்டவர் மன்சூர் அலிகான் இவர் விஜயகாந்த், ரஜினி எனத் தொடங்கி பல்வேறு டாப் நடிகரின் படங்களில் நடித்துள்ளார். இவருடைய வில்லத்தனத்தை பார்க்க அப்போ ஒரு கூட்டம் இருக்கிறது. விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் படத்தில் வீரப்பன்னாக பயங்கரமாக நடித்து கைதட்டல் வாங்கி இருப்பார்.
அதன் பிறகு அதிக படங்களில் தலைகாட்டி வந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது இருந்தாலும் அவ்வபோது எதையாவது பேசி பிரபலமாகி விடுவார். இப்படி ஓடிக் கொண்டிருந்த மன்சூர் அலிகான் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்பொழுது டாப் ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
அந்த வகையில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “லியோ” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நான் ரெடி பாடலில் கூட இவர் தென்பட்டார் அதையே ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர் இந்த நிலையில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த மன்சூர் அலிகான் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் சொன்னது.. வெண்டைக்காய் சாப்பிடுங்க ஆனால் மது அருந்தி விட்டு உடனே வெண்டைக்காயை சாப்பிட வேண்டாம் அதே போல் அகத்திக் கீரையும் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று மது அருந்துவதற்கும் முன்பும் சரி, பின்பும் சரி அகத்திக் கீரையை உணவே வேண்டாம்.
மீறி சாப்பிட்டால் உடனே அவர்கள் உயிரிழந்து போவார்கள் வெண்டைக்காய் சாப்பிட்டு குடித்துவிட்டு இரவு தூங்கினால் தலையில் பயங்கர வழி பரவும் அப்பொழுதே தெரிந்து கொள்ளலாம் மூளைக்கு நல்லது செய்யது இருக்கும் ஆனால் கெட்டதான மதுவை அனுப்பி உள்ளீர்கள் என்று புரிந்து கொள்வீர்கள். இதனை ரசிகர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாக்கி வருகின்றனர்.