தனுஷுடன் நடிக்காதே.. சோனியா அகர்வாலின் அம்மா பிடிவாதம் – அந்த நடிகை என்ன சொன்னார் தெரியுமா.?

soniya-agarval-
soniya-agarval-

நடிகை சோனியா அகர்வால் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சோனியா அகர்வால். குறிப்பாக தமிழில் இவர் நடித்த கோவில், செவன் ஜி ரெயின்போ காலனி, மதுர, திருட்டுபயலே, புதுப்பேட்டை போன்ற படங்கள் இன்றும் ரசிகர்களுக்கு பிடித்த படங்களாக இருக்கின்றன.

தொடர்ந்து சினிமாவில் வெற்றியை ருசித்த வந்தாலும் ஒருசில கெட்ட பழக்கங்கள் சோனியா அகர்வாலுக்கு இருந்தது அதுவே அவரது சினிமா பயணத்தை கீழே இறங்கி விட்டது. அதை ஒரு வழியாக  உணர்ந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து விலகி தற்போது மீண்டும் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் ரசிகர்கள் இவர் நடித்த முதல் படமான காதல் கொண்டேன் படத்தை தான் பெரிதளவு கொண்டாடி வருகின்றனர் அந்த அளவிற்கு படம் அற்புதமாக இருக்கும் இந்த படத்தில் சோனியா அகர்வால், தனுஷ் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தி இருப்பார்கள்.

காதல் கொண்டேன் படம் குறித்து அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் விலாவாரியாகப் பேசி உள்ளார் அது குறித்து தற்போது பார்ப்போம். காதல் கொண்டேன் படத்தில் நடிக்கப்போவதாக தன் அம்மாவிடம் சொன்ன சோனியா அகர்வால் சொல்லி உள்ளார் உடனே யார் ஹீரோ என கேட்டுள்ளார் தனுஷ் என்று சொன்னதும் அவரது தோற்றத்தைக் கண்டு இந்த படத்தில் நடிக்க வேண்டாம் உனக்கும், அவருக்கும்  சுத்தமாக செட் ஆகாது என கூறி வேண்டாம் என மறுத்துள்ளார் சோனியா அகர்வாலின் அம்மா.

ஆனால் கதை பிடித்து இருக்கிறது நான் நடிக்கிறேன் என்று சோனியா அகர்வால் கூறி நடித்துள்ளார் அந்த படம் பின் சூப்பர் ஹிட்டானது அதேபோல் அந்த கதைக்கு அப்படி ஒரு நாயகன் வேண்டும் என்று செல்வராகவன் வடிவமைத்த அந்த கதாபாத்திரம் பல பாராட்டுகளையும் பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து சோனியா அகர்வால் மீண்டும் தனுஷுடன் கைகோர்த்து புதுப்பேட்டை படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.