தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் லோகேஷ் கனகராஜ் இவர் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பண்டிகை நாட்கள் வந்து விட்டாலே வீட்டில் இருக்கும் ஆண் பெண் அனைவரும் தொலைக்காட்சியில் என்ன புதிய திரைப்படத்தை போடப் போகிறார்கள் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த மாதம் தீபாவளி வருவதால் எந்தெந்த தொலைக்காட்சியில் எந்த புதிய திரைப்படம் போடுவார்கள் என தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் பகத்பாஸில் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படம் இந்த தீபாவளி தினத்தில் பிரபல தொலைக்காட்சியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அது வேறு எந்த தொலைக்காட்சியும் கிடையாது விஜய் தொலைக்காட்சியில் தீபாவளி தின சிறப்பு திரைப்படமாக கமலின் விக்ரம் திரைப்படம் அக்டோபர் 24ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறார்கள் அதன் பிரோமோ வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை அதிகாரப்பூர்வமாக விஜய் தொலைக்காட்சி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள். இந்த தீபாவளி தினத்தில் விக்ரம் திரைப்படம் திரையிடப்படுவதால் மற்ற தொலைக்காட்சிகளில் என்ன திரைப்படம் என்பதை தெரிந்து கொள்ள ஆவலோடு இருக்கிறார்கள் மக்கள் அது மட்டுமில்லாமல் விக்ரம் திரைப்படம் திரையிடப்படுவதால் டிஆர்பி யில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் எனவும் தெரிய வருகிறது.
ஏனென்றால் விக்ரம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அந்த வகையில் கண்டிப்பாக தீபாவளி தினத்தில் விக்ரம் திரைப்படத்தை பொதுமக்கள் பலரும் கண்டு மகிழ்வார்கள் அதனால் டிஆர்பிஎல் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.