திவாளி தினத்தில் சிறப்பு திரைப்படமாக பீஸ்ட், விக்ரம், kgf-2, டான் எந்தெந்த தொலைகாசியில் தெரியுமா.? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

diwali-special-movie
diwali-special-movie

பொதுவாக பண்டிகை நாட்கள் வந்து விட்டாலே மக்களுக்கு மிகப்பெரிய சந்தோசம் என்னவென்றால் புது உடை எடுப்பது அதனை கொண்டாடுவது என மிகவும் பிசியாக இருப்பார்கள் அதிலும் ஒரு சில மக்கள்  தொலைக்காட்சிகளில் எந்த திரைப்படத்தை போட போகிறார்கள் என்ன திரைப்படத்தை பார்க்கலாம் எந்த தியேட்டருக்கு போய் புது திரைப்படத்தை பார்க்கலாம் என பிளான் செய்து கொண்டிருப்பார்கள்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையிள் எந்தெந்த தொலைக்காட்சியில் எந்த திரைப்படம் என்பதை இங்கே காணலாம்.

சன் தொலைக்காட்சி- டாக்டர், கோலமாவு கோகிலா ஆகிய திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்ட நெல்சன் இயக்கத்தில் முதன் முறையாக விஜய் நடித்த திரைப்படம் தான் பீஸ்ட் இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி தினமான அக்டோபர் 24ஆம் தேதி மாலை ஒளிபரப்பாக இருக்கிறார்கள் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சி – விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் பகத்பாசில் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த விக்ரம் திரைப்படத்தை அக்டோபர் 24ஆம் தேதி மாலை  தீபாவளி தின சிறப்பு திரைப்படமாக   ஒளிபரப்பாக இருக்கிறார்கள்.

ஜீ தமிழ்- ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தீபாவளி தின சிறப்பு திரைப்படமாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஸ் நடிப்பில் இந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கே ஜி எஃப் இரண்டாவது பாகம் அக்டோபர் 24ஆம் தேதி மாலை ஒளிபரப்பாக இருக்கிறார்கள்.

கலைஞர் டிவி- கலைஞர் தொலைக்காட்சியில் தீபாவளி பெற சிறப்பு திரைப்படமாக அக்டோபர் 24ஆம் தேதி மாலை சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியாக்கிய டான் திரைப்படத்தை ஒளிபரப்ப இருக்கிறார்கள்.

இப்படி ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் புதிய புதிய திரைப்படம் ஒளிபரப்ப இருப்பதால் எந்த திரைப்படத்தை பார்க்கலாம் என மக்கள் குழப்பத்தில் இருக்கும்படி இருக்கிறது இந்த அறிவிப்பு. இருந்தாலும் இந்த தீபாவளி  சரவெடி போல் அனைத்து மெகா ஹிட்   திரைப்படங்களும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதால் மக்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.