தீபாவளி ரேசில் மோதிக்கொள்ளப் போகும் மூன்று திரைப்படங்கள்.! வேண்டாம் என விலகிக்கொண்ட இரண்டு நடிகர்கள்..

Diwali release tamil movie
Diwali release tamil movie

Diwali release tamil movie : பண்டிகை நாட்கள் என்றாலே முன்னணி நடிகர்களின் திரைப்படம் திரையரங்கிற்கு வருவது வழக்கம்தான் இந்த நிலையில் வருகின்ற தீபாவளி தினத்தில் கார்த்தி நடிப்பில் உருவாக்கியுள்ள ஜப்பான், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா 2, ஆகிய இரண்டு திரைப்படங்களும் மோதிக்கொள்ள இருப்பதாக ஏற்கனவே அறிவித்து விட்டார்கள் இந்த நிலையில் தற்பொழுது விக்ரம் பிரபு நடித்து வரும் ரெய்டு திரைப்படமும் தீபாவளி ரேசில் இணை இருக்கிறது.

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படத்தை ராஜு முருகன் இயக்கியுள்ளார் இவர் இதற்கு முன்பு ஜோக்கர் என்ற திரைப்படத்தை இயக்கி பிரபலமானவர் அதுமட்டுமில்லாமல் தேசிய விருதையும் பெற்றுள்ளார். இந்த திரைப்படத்தில் அணு இமானுவேல் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார் கார்த்தியின் 25வது திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

பாஸ் இது ரெக்கார்டு இல்ல வரலாறு.! முதல் நாள் பாக்ஸ் ஆபீஸில் லியோ மிரட்டல் சாதனை.. ரிலீசுக்கு முன்பே ஆட்டத்தை ஆரம்பிச்சிடாங்களே

ஜிகர்தண்டா 2 இந்த திரைப்படம் ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகியுள்ளது. முதல் பாகத்தில்  சித்தார்த் நடித்திருந்தார் இந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் ராகவா லாரன்ஸ் எஸ் ஜெ சூர்யா இணைந்து நடித்துள்ளார்கள் படத்தை கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரெய்டு இந்த திரைப்படத்தை கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் கன்னடத்தில் சிவராஜ் குமார் நடிப்பில் உருவான “தகரு” என்ற திரைப்படத்தின் ரீமேக் தான். படத்தில் ஸ்ரீதிவ்யா, அனந்திகா, ரஷி ரித்விக் சவுந்தர்ராஜன், ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இது சும்மா ட்ரையல் தான்மா.. மெயின் பிக்சர் இனிமேல்தான் இருக்கு.! இந்த வார சீரியல் டிஆர்பி ரேட்டிங்.!

ஆனால் இந்த தீபாவளி தினத்தில் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் வெளியாக இருந்தது ஆனால் இன்னும் படத்தின் வேலைகள் சரியாக முடியாததால் வருகின்ற பொங்கல் தினத்திற்கு அயலான் திரைப்படத்தை மாற்றிவிட்டார்கள். அதுமட்டுமில்லாமல் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படமும் தீபாவளிக்கு தான் ரிலீஸ் என முதலில் கூறப்பட்டது பிறகு நவம்பர் மாத இறுதிக்கு துருவ நட்சத்திரம் நகர்ந்துவிட்டது.