விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி ). இவர் விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.
இவர் வெள்ளித்திரையிலும் நடித்து வந்தார் ஆனால் எந்தப் படமும் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தராத காரணத்தினால் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக தனது கெரியரை தொடங்கினார்.
பிறகு தனது மிகவும் நெருங்கிய நண்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களுடைய திருமண பந்தம் நீண்ட நாள் நீடிக்கவில்லை பின்பு இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள்.
நீண்ட வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்த திவ்யதர்ஷினிக்கு அவருடைய பெற்றோர் சமீபகாலமாக மாப்பிள்ளை தேடி வருகிறார்கள்.
இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடைய ஜாதகம் திவ்யதர்ஷினியின் ஜாதகத்துடன் ஒத்துப் போவதாகவும் கூறப்படுகிறது.
இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை விரைவில் திவ்யதர்ஷினி இதைப்பற்றி அதிகாரப்பூர்வமான தகவலை கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.