Anchor DD Sing a spanish song video: உலகமே கொரோனா வைரஸின் ருத்திர தாண்டவத்தால் நிலை தடுமாறி உள்ளது. இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 13387 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையிலும் 437 பேர் பலியாகியும் உள்ளார்கள்.கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் விளைவாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இத்தடை மே 3 வரை நீடிக்கும் என மாநில அரசு அறிவித்துள்ளது. வணிக வளாகங்கள், கல்லூரி, பள்ளி போன்றவை மூடப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர், இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீடியாக்கள் மூலம் விழிப்புணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சினிமா பிரபலங்கள் பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி வீடியோக்களை வெளியிட்டு விழிப்புணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் போரடிக்காமல் இருக்க பாட்டு பாடுவது, சமைப்பது, ஆடுவது என பொழுதை கழித்து வருகின்றனர்.இந்த நிலையில் பிரபல தொகுப்பாளரான டிடி அவர்கள் போரடிக்காமல் இருக்க புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார் .
அந்த வகையில் தற்போது அவர் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான monety hinest என்ற தொடரில் இடம் பெற்ற ஸ்பானிஷ் பாடலை பாடி அசத்தியுள்ளார் அம்மணி.
இதோ அந்த வீடியோ.
#Divyadarshini #Anchor pic.twitter.com/jPCpX06Il9
— Tamil360Newz (@tamil360newz) April 18, 2020