தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வருவதற்கு முன்பே சீரியல் நடித்துள்ள திவ்யதர்ஷினி..! அதுவும் இப்படி ஒரு கதாபாத்திரமா..?

dhivya dharshini

Divyadarshini, who has acted in serials before appearing as a TV presenter: பிரபலதனியார் தொலைக்காட்சி மூலமாக ரசிகர் மத்தியில் பிரபலமானவர் தான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி  இவர் திரை உலகில் முதல் முதலாக விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலமாக ரசிகர் மத்தியில் பிரபலமானார்.

இவ்வாறு தொடர்ந்து விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த திவ்யதர்ஷினி தற்போது இளசுகளின் கிரஷ் ஆகவே மாறிவிட்டார். ஏனெனில் இவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்றாலே  போதும் ரசிகர்களுக்கு நேரம் போவதே தெரியாது ஏனெனில் அந்த அளவிற்கு ஜாலியாக கொண்டு செல்வார்.

பொதுவாக பிரபலமாக இருந்து விட்டாலே போதும் பல்வேறு கிசுகிசுப்பில் மாட்டிக் கொள்வது வழக்கம் தான்  அந்தவகையில் தொகுப்பாளினி டிடியும் பல்வேறு கிசுகிசுப்பில் மாட்டிக்கொண்டார். என்னதான் தன் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அதைப்பற்றி சுத்தமாக கவலைப்படாமல் தனது பாதையை தேடிச்செல்லும் டிடி விஜய் டிவியின் நம்பர் 1 தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி சமீபத்தில் அவருடைய நண்பர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆன சில வருடங்களிலேயே அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பின்னர் இருவரும் பிரிந்து விட்டார்கள்.

என்ன தான் தனது வாழ்க்கையில் பல கசப்பான விஷயங்கள் நடந்தாலும் அதை எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் முன்னேறிவரும் திவ்யதர்ஷினி  தொகுப்பாளினியாக  ஆவதற்கு முன்பே பிரபல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் அது வேறு எந்த சீரியலும் கிடையாது பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான செல்வி சீரியலில் தான்.

இவ்வாறு வெளிவந்த இந்த சீரியல் ஆனது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவுவது மட்டுமல்லாமல் அவர் நடித்த காட்சியின் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

dhivya dharshini
dhivya dharshini