தனது இளம் வயதிலேயே தொகுப்பாளினியாக விஜய் டிவியில் கால் தடம் பதித்து மக்கள் மத்தியில் அறிமுகமானவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவர் தொடர்ந்து காபி வித் டிடி, ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்தவர்.
தற்போது தொடர்ந்து விஜய் டிவியில் பயணிக்கவில்லை என்றாலும் சில முக்கிய நிகழ்ச்சிகளை டிடி தான் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடைசியாக விக்ரம் படத்தின் ஆடியோ லாஞ்சை டிடி தான் தொகுத்து வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது வெள்ளித்திரையில் சுந்தர் சி நடிப்பில் உருவாகி வரும் ஒரு திரைப்படத்திலும் டிடி நடித்து வருகிறார். இப்படி சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை என இரண்டிலும் தனது கால் தடம் பதித்து சிறப்பாக பயணித்து வரும் டிடி எந்த அளவிற்கு உழைக்கிறாரோ அதே அளவிற்கு தனக்கு பிடித்த..
பல இடங்களுக்கு சுற்றுலா சென்று ஜாலியாக தனது வாழ்க்கையை என்ஜாய் செய்து வாழ்ந்து வருகிறார். அப்படி வெளிநாடுகளில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போதும் வெளிநாட்டில் ஊர் சுற்றி வரும் டிடி அங்கு அவர் தனது பொழுதைக் கழிக்கும் வீடியோ தொகுப்பு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை வெளியிட்டு அன்பார்ந்த ஆண்கள் மற்றும் பெண்களே கடினமாக சம்பாதித்து பாதுகாப்பாக உலகம் சுற்றுங்கள் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு மற்றும் டிடி வெளியிட்ட வீடியோ தற்போது ரசிகர்கள் பலரையும் கவர்ந்து இழுத்துள்ளது. இதோ அந்த வீடியோ.