விஜய் டிவி தொலைக்காட்சியில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் தொகுத்து வழங்கப்படுகின்றன அதற்கு ஏற்றார் போல ஏகப்பட்ட தொகுப்பாளர்களையு ம் கைவசம் வைத்திருக்கிறது விஜய் டிவி. ஆனால் சினிமா நடிகர்களின் படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சி படத்தொகுப்பு சிறப்பு நேர்காணல் என ஏதாவது நடிகர்கள் விஜய் டிவி பக்கம் வந்தால்..
அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஒரு நபர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி மட்டும் தான். இவர் பல வருடங்களாக தொகுப்பாளராக விஜய் டிவியில் பணியாற்றி வருகிறார் இவர் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது மக்களுக்கு ரொம்ப பிடித்த நிகழ்ச்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது அதனை தொடர்ந்து டிடி வருகின்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் பிரபலமான நிகழ்ச்சிகள் தான் என சொல்லப்படுகிறது.
அந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்திழுக்கும் சக்தி அவரிடம் உள்ளது.
இவர் தொகுப்பாளர் என்ற அந்தஸ்தையும் தாண்டி சினிமா உலகில் பல்வேறு படங்களில் தலைகாட்டி தான் இருக்கிறார் ஆனால் அவருக்கு ரொம்ப பிடித்தது தொகுப்பாளர் தான் இருப்பினும் ஒன்னு ரெண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் காபி வித் காதல் என்ற திரைப்படத்திலும் டிடி நடிக்கிறார்.
மேலும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சின்னத்திரை வெள்ளிதிரை என இரண்டிலும் சிறப்பாக ஓடி வரும் டிடி நிஜ வாழ்க்கையில் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு அதன் பின் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி பிரபல இசை அமைப்பாளர் அனிருத் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம். ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருமணம் ஆகாத நடிகருடன் இப்படியா நெருக்கமாக இருப்பது எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..