பணத்திற்காக மருத்துவமனையில் நடக்கும் அநியாயங்கள்… புட்டு புட்டு வைக்கும் சத்யராஜ் மகள் திவ்யா.. வைரலாகும் தகவல்..

divya sathyaraj
divya sathyaraj

நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என ஒரு ரவுண்டு வந்தவர் இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களுக்காக விருதுகளையும் வாங்கியுள்ளார் கடைசியாக இவர் நடிப்பில் ஆர் ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன்  திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் சத்யராஜ் தற்போது தோழர்  என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சத்யராஜ் மட்டுமல்லாமல் சத்யராஜ் மகனும் ஒரு நடிகர் தான். இவர் ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் பெரிதாக தற்பொழுது வர வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். மேலும் சத்யராஜ் மகள் மருத்துவத்துறையில் கலக்கிக் கொண்டிருக்கிறார் தினமும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் குறித்து பல பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்த முதல் திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்…

அந்த வகையில் மருத்துவத்துறையில் நடக்கும் மோசமான நிகழ்வு குறித்து அவர் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அதில் அவர் பேசியதாவது சில தனியார் மருத்துவமனையில் சும்மாவே பணத்திற்காக இரத்த பரிசோதனை என்று பல டெஸ்டிகள் எடுக்கிறார்கள் நோயாளிகள் பூரணமாக குணமடைந்தாலும் பணம் பிடுங்குவதற்காக அங்கே வைத்துக் கொள்கிறார்கள்.

நல்ல சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை வருகிறார்கள் ஆனால் அங்கும் பணம் பிடுங்கும் இடமாக இருக்கிறது எங்களது நிறுவனமும் பலருக்கும் உதவி செய்து வருகிறோம் ஆனால் எல்லா நோயாளிகளுக்கும் உதவ முடியவில்லை, சில தனியார் மருத்துவமனைகள் இது போல் செய்வதை நிறுத்த வேண்டும் என அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

பாக்யாவை பழி வாங்குவேன் என பல்பு வாங்கிய கோபி!! ராதிகாவுக்கு உண்மை தெரிந்தால் வெடிக்கப் போகும் பிரச்சனை. பாக்கியலட்சுமி.