பெரம்பலூரில் பிறந்தவர் திவ்யா துரைசாமி. இவர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். அதுமட்டுமில்லாமல் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
புதிய தலைமுறை மட்டுமல்லாமல் நியூஸ் 7, தந்தி டிவி என பல தொலைக்காட்சிகளிலும் இவர் பணியாற்றியுள்ளார் அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளமான யூடியூப் சேனலில் படங்களை திரை விமர்சனம் செய்து வந்தார்.
இந்த நிலையில் திவ்யா துரைசாமி தமிழில் முதன்முதலாக 2020ஆம் ஆண்டு வெளியாகிய இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இவர் அதன்பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் இதுவரை நடிக்கவில்லை. இந்தநிலையில் தமிழ்சினிமாவில் நடிகைகள் எப்பொழுதும் பட வாய்ப்பு இல்லை என்றால் புகைப்படத்தை வெளியிட்டு சமூகவலைதளத்தில் பட வாய்ப்பை தேடுவார்கள்.
அந்த வகையில் தற்போது சினிமா நடிகைகளை காட்டிலும் சீரியல் நடிகைகள் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு எப்படியாவது வெள்ளித்திரையில் நடிக்க வேண்டுமென ஆர்வம் காட்டி வருகிறார்கள் அப்படி தான் நடிகை திவ்யா துரைசாமி அவர்களும் சமூக வளைதளத்தில் புடவையில் ரசிகர்களை மயக்கும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.