சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் திவ்யதர்ஷினி ஆவார். மேலும் இவர் அவரது இளம் வயதிலேயே ஆங்கரிங் துறையை தேர்வு செய்து அதுவும் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக பயணித்து வருகிறார். இவருக்கு டிடி என்ற அழகிய செல்ல பெயரும் உள்ளது.
இந்த நிலையில் டிடி சிறந்த தொகுப்பாளினி என பல விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நாளைய தீர்ப்பு, எங்கிட்ட மோதாதே, காபி வித் டிடி, விஜய் டெலி அவார்ட்ஸ் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் இருந்தாலும் இவருக்கு பேரையும் புகழையும் சேர்த்து தந்தது காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் தான்.
இப்படி சிறப்பாக பயணித்து வந்த இவர் தற்போது சமீபகாலமாக டிவி நிகழ்ச்சிகளில் பெரிதும் பணி புரியாமல் வெளிநாடுகளுக்கு சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இவர் வெளிநாடுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பலவற்றை தொடர்ந்து அவரது இன்ஸ்டா பக்கங்களில் பதிவிட்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இருந்தாலும் ஒரு சில முக்கிய நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொள்ளுவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் பிக் பாஸ் சீசன் 5 வருண் நடிப்பில் உருவாகி வரும் “ஜோஸ்வா இமைபோல் காக்க” என்ற திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருவதாக தகவல் வெளியாகின.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டிடி ரசிகர்களுக்காக தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது இவர் வெளிநாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படம் சிலவற்றை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த அழகிய புகைப்படம் நீங்களே பாருங்கள்.