Director Shankar: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக இருந்து வருபவர் தான் சங்கர். இவர் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். பொதுவாக இவர் திரைப்படங்களை சமகால சமூகப் பிரச்சனைகள், விழிப்புணர்வு கருப்பொருட்கள் மற்றும் நவீன தொழில்நுட்பம் போன்றவற்றை பயன்படுத்தி படங்களை இயக்கி வருகிறார்.
அப்படி தற்பொழுது இவர் நடிகர் கமலஹாசன் அவர்களை வைத்து இந்தியன் 2 படத்தினை உருவாக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. அப்படி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் 1996ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியாகிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. எனவே 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 படத்தினை உருவாக்கி வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடி தொடங்கிய பொழுது ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட்டது சில உயிரிழப்புகளும் படப்பிடிப்பின் பொழுது நிகழ்ந்ததனால் படம் நிறுத்தப்பட்டது.
தற்பொழுது தான் தொடங்கப்பட்டு முழு வீச்சியுடன் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு மற்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இயக்க சங்கர் தயாராக இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் இவருடைய மூத்த மகளின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து பிரபல நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
நடிகர் சங்கர் ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இவருக்கு ஐஸ்வர்யா சங்கர், அதிதி சங்கர் என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள். அதில் இவருடைய இளைய மகளான அதிதி சங்கர் தற்பொழுது திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
ஆனால் இவருடைய மூத்த மகளான ஐஸ்வர்யா சங்கர் பெரிதாக மீடியாவில் பார்க்க முடியாது. இந்நிலையில் பாண்டிச்சேரியில் கிரிக்கெட் வீரர் ரோஹித் என்ற பெரிய பணக்கார வீட்டு பையனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்தார். இவ்வாறு பெரிய இடம் என்ற எண்ணத்தில் சங்கர் கிரிக்கெட் வீரரான ரோகித்துக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
இவர்களுடைய திருமணம் பல கோடி செலவில் உருவான நிலையில் அதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்ற வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். ஆனால் ஆறே மாதத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தார். அதாவது, ரோஹித் நிறைய பெண்களுடன் தொடர்பில் இருந்ததால் அதில் இரண்டு பெண்கள் கம்ப்ளைன்ட் செய்ததனால் ரோஹித்தை வேண்டாம் எனக் கூறிவிட்டு ஐஸ்வர்யா சங்கர் வீட்டிற்கு வந்து விட்டார் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.