ஒவ்வொரு தொலைக்காட்சிகளுக்கும் இடையே டிஆர்பிஇல் பலத்த போட்டி நிலவி வருகிறது அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறார்கள்.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி, ராதிகா, பாக்கியலட்சுமி, இனியா, எழில் ராமமூர்த்தி, ஈஸ்வரி என பல கதாபாத்திரங்கள் இந்த சீரியலுக்கு முக்கிய கதாபாத்திரமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த சீரியலில் கோபி மற்றும் ராதிகாவிற்கு இடையே இனியாவை வைத்து அடிக்கடி சண்டை வர ஆரம்பித்துள்ளது. இதில் என்ன ஒரு விஷயம் என்றால் கோபி யாருக்கு சப்போர்ட் செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறார்.
கோபி தனது மனைவி பாக்கியாவிற்கு மட்டும்தான் நல்ல கணவராக இல்லை ஆனால் தனது குழந்தைகள் அம்மா அப்பா என அனைவரையும் பாசமாக கவனித்துக் கொள்ளும் நபராக தான் இருந்து வந்தார். அதனால்தான் இத்தனை வருடங்கள் ஆகியும் பாக்கியா பொறுமையாக இருந்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இனியா ஸ்கூலில் செய்த சேட்டையால் வீட்டில் மாட்டிக்கொண்டார் அதனால் இனியவை வீட்டில் உள்ள அனைவரும் கண்டிக்கிறார்கள்.
இந்த நிலையில் இனியா இனிமேல் நான் இங்கு இருக்க மாட்டேன் என கோபியுடன் ராதிகா வீட்டிற்கு செல்கிறார் ஆனால் இனியாவிற்கு பாதுகாப்பாக தாத்தா ராமமூர்த்தியும் அங்கு சென்று விடுகிறார் இனிய மற்றும் ராதிகா இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கிறது. ராதிகா காபி குடிக்கலையா என கேட்டால் கூட அதனை இனியா பெரிய சண்டையாக மாற்றி விடுகிறார்.
சமீபத்தில் கூட உங்களுக்கு நான் முக்கியமா இல்லை ராதிகா முக்கியமா டாடி என இனியா கேட்கிறார் உடனே கோபியும் அனைவரும் முன்னாடியும் நீ தான் முக்கியம் என சொல்லிவிடுகிறார் இனியாவிடம் அதனால் ராதிகா தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என கோபியை பார்த்து கோபப்படுகிறார். இப்படியே அடிக்கடி கோபிக்கும் ராதிகாவுக்கும் சண்டை ஏற்பட்டு கொண்டே இருக்கிறது அதனால் பொறுமையை இழந்த ராதிகா ஒரு காலகட்டத்தில் டிவோர்ஸ் வேணும் என கேட்கிறார்.
ராதிகா இவ்வாறு கேட்டது கோபிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது இதனால் கோபி என்ன முடிவு எடுப்பார் என்பது யாருக்கும் தெரியவில்லை அது மட்டும் இல்லாமல் கோபி ராதிகாவை சமாதானப்படுத்துவாரா அல்லது ராதிகாவின் முடிவை ஏற்றுக்கொண்டு டிவோர்ஸ் கொடுக்கப் போகிறாரா என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.