வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர்களில் ஒருவர் தான் இளைய தளபதி விஜய் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் மக்களின் பேராதரவை பெறவில்லை இதனால் தளபதி விஜய் தனது அடுத்த திரைப்படத்தை மிகவும் தரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
மேலும் இவரது அடுத்த திரைப்படமான வாரிசு அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளிவர வாய்ப்பு இருக்கிறது என தகவல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.இதனைத்தொடர்ந்து இந்த திரைப்படத்தை பற்றி தற்பொழுது ஒரு தகவல் கசிந்துள்ளது.
அதாவது தமிழ்நாடு விநியோகஸ்த உரிமையை இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு 80 கோடிக்கு விற்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாட்டில் 80 கோடிக்கு மேல் ஷேர் செய்து உள்ளது ஆனால் பீஸ்ட் திரைப்படம் அறுபது கோடி மட்டுமே ஷேர் செய்துள்ளதால் வாரிசு திரைப்படத்தை 80 கோடிக்கு விற்க முடிவு செய்துள்ளார்களாம்.
ஆனால் 80 கோடி கொடுத்து வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் தயங்குகிறார்களாம் எதற்காக என்று கேட்டால் விஜய்யின் ஒரு படம் தற்பொழுது சொதப்பி உள்ளதே முன்பெல்லாம் விஜய் படம் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் விநியோகஸ்தர்கள்.
தற்பொழுது சொதப்பியதும் யோசித்து வருகிறார்கள் மேலும் இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் வாரிசு திரைப்படம் மட்டும் வெளியாகட்டும் அதற்கு அப்புறம் பாருங்கள் கோடி கோடியாக வசூல் செய்துவிடும் என்று கூறி வாரிசு திரைப்படத்தை எதிர்பார்த்து வருகிறார்கள்.