தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் விஜய். பொதுவாக இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் மிகவும் குறைவான சம்பளத்தை தான் பெற்ற வந்தாராம் அதன்பிறகு மூன்று வருடங்களில் மட்டுமே 22 கோடி சம்பளம் வாங்கும் அளவிற்கு சினிமாவில் வளர்ந்துள்ளார்.
இவ்வாறு இவரின் விடா முயற்சியினாலும்,சிறந்த நடிப்புத் திறமையாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தற்போது உலகம் முழுவதும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து தனது 65வது திரைப்படமான பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் மெர்சல். இத்திரைப்படத்தில் விஜயை தொடர்ந்து காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகளை தொடர்ந்து வடிவேலு உள்ளிட்ட இன்னும் சில நடிகர்களும் நடித்திருந்தார்கள்.
இத்திரைப்படத்தின் ஸ்பெஷல் என்று பார்த்தால் இது வரையிலும் விஜய் நடிக்காத ஒரு வேடமான மேஜிக் மேனாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்பொழுது இத்திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒரு சண்டை காட்சியின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.