தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன்.இவர் இயக்கத்தில் உருவாகும் படங்களில் பெரும்பாலும் நடிகைகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்.
இவர் சிம்பு,சூர்யா மற்றும் தல அஜித் போன்ற பல முன்னணி நடிகர்கள் வைத்து படம் இயக்கியுள்ளார்.இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் இவரும் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் இயக்கத்தில் வெளியாகும் அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடும். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இவர் இயக்கும் படங்கள் பல பிரச்சனைகளை தாண்டி தான் ரிலீசாக வேண்டியதாக உள்ளது.
எனவே இவர் இயக்கும் படங்களில் பணியாற்றுவதற்காக நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கொஞ்சம் தயங்கி வருகிறார்கள். இந்நிலையில் சமீப பேட்டியில் கௌதம் மேனனிடம் ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர்களை வைத்து படங்களை இயக்கி விட்டீர்கள் ஆனால் ஏன் விஜய் மற்றும் ரஜினியை வைத்து படங்கள் இயக்கவில்லை என கேட்டுள்ளார்கள். அதற்கு பதிலளித்த கௌதம் மேனன் நான் அவர்களை வைத்து இயக்க தயாராகத்தான் இருக்கிறேன் ஆனால் அவர்கள் தான் தயாராக இல்லை என கூறினார்.
இதனைத் தொடர்ந்து விஜய் மற்றும் ரஜினி யை வைத்து நான் படம் இயக்கினால் அது அவர்களின் படமாக இருக்காது என் படமாக தான் இருக்கும் என்று கூறியுள்ளார். மற்ற சில நடிகர்களை போலவே இவர்களும் என் படத்தில் நடிக்க பயப்படுகிறார்கள் எனவும் கூறியிருந்தார்.