எம் ராஜா :- தெலுங்கு திரை உலகில் மாபெரும் வெற்றி பெற்ற ஜெயம் திரைப்படத்தை தமிழில் இயக்கி பிரபலமானவர் இயக்குனர் எம் ராஜா அவர்கள். இவர் ஜெயம் ரவியை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் இந்தத் திரைப்படம் ஜெயம் ரவிக்கும் முதல் திரைப்படம் அதே போல் எம். ராஜாவிற்கும் முதல் திரைப்படம்.
மாரி செல்வராஜ்:- பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் அறிமுகமான இந்த முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்திற்காக பல விருதுகளையும் வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் கனகராஜ் :- சினிமாவில் நுழைந்ததில் இருந்து தற்போது வரைக்கும் தோல்வியை சந்திக்காத இயக்குனர்களில் இவரும் ஒருவர் இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது அதே சமயம் வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இவர் இயக்கிய முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படம் இவரின் திரை வாழ்வில் ஒரு முக்கிய திரை படமாக அமைந்துள்ளது.
நவீன்:- இவர் நடிகர் மற்றும் இயக்குனராக இருந்து வருகிறார் இவருடைய முதல் திரைப்படமான மூடர் கூடம் என்ற திரைப்படம் அழுத்தமான வசனங்களுடன் உருவாகி விமர்சன ரீதியாக பல பிரபலங்களின் பாராட்டுகளை பெற்று உள்ளது. மேலும் நவீன் அவர்கள் இந்த படத்தை இயக்கி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நலன் குமாரசாமி :- தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி அவர்களை வைத்து சூது கவ்வும் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் நகைச்சுவை மற்றும் திரில்லர் திரைப்படமாக அமைந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை அரசியல் கருத்துகளை நகைச்சுவையாக எடுத்துரைத்து பிரபலமானார் இயக்குனர் நலன் குமாரசாமி.
சமுத்திரகனி:- இயக்குனர், நடிகர் என பன்முக தன்மை கொண்டு விளங்குபவர் இயக்குனர் சமுத்திரக்கனி. இவர் நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும், அப்பாவாகவும், வில்லனாகவும் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் இயக்கிய நாடோடிகள் திரைப்படம் பல விருதுகளை வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராம்:- கற்றது தமிழ் என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி பெற்றவர் இயக்குனர் ராம் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ராம் அவர்கள் விமர்சன ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சசிகுமார்:- நடிகர், இயக்குனர் என பன்முகதன்மை கொண்டு விளங்கி வருகிறார் இயக்குனர் நடிகர் சசிகுமார் அவர்கள். இவர் இயக்கி நடித்த முதல் திரைப்படமான சுப்பிரமணியபுரம் திரை படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தற்போது வரையிலும் இந்த படத்தை பற்றி பேசாத ஆளே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு இந்த திரைப்படம் இயக்குனர் சசிகுமார் அவர்களுக்கு வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது.