சினிமாவில் உள்ள சில இயக்குனர்கள் தனது முதல் படத்தை இயக்கி முடித்தவுடன் அந்த படம் வெற்றியாகவில்லை என்றால் பழைய நிலைமைக்கு திரும்பி விடுவார்கள். ஒரு சில இயக்குனர்கள் தனது முதல் திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்து உள்ளது என்றால் அவர்கள் தற்போது சினிமாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் யார் எந்தெந்த திரைப்படத்தை இயக்கியுள்ளனர் என்று தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
அட்லி :- இயக்குனர் அட்லி சங்கரின் துணை இயக்குனராக பணியாற்றி புகழ் பெற்றார். அதன் பிறகு ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நடிப்பில் வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கிய அறிமுகமானார். இவர் இயக்கிய முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றது அதன் பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் அட்லி. மேலும் இயக்குனர் அட்லி அவர்கள் தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
ஜெ மகேந்திரன் :- நடிகர், திரைக்கதை எழுத்தாளர், என்ன பன்முகத்தன்மை கொண்டவர் இவர் ரஜினியை வைத்து முள்ளும் மலரும் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இவர் இயக்கிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் தற்போது மகேந்திரன் அவர்கள் ஒரு சில திரைப்படங்களில் நடித்தும் வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சேரன்:- கே எஸ் ரவிக்குமார் அவர்களின் ஆரம்ப காலகட்டத்தில் திரை பயணத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்து புகழ்பெற்றவர் சேரன் அவர்கள் இவர் தனது முதல் படத்திலேயே தேசிய விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர் சேரன் அவர்கள் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நடிப்பில் வெளியான ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
சங்கர் :- சினிமாவைப் பொறுத்தவரை பிரம்மாண்ட இயக்குனர் என்றாலே அது ஷங்கர் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்தையும் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். அப்படி இவர் இயக்கிய முதல் திரைப்படமான ஜென்டில்மேன் திரைப்படம் மாபெரும் ஹிட் கொதித்து உள்ளது.
பாலா:- குறைந்த பட்ஜெட் பொருட்செலவில் ஆழமான கருத்துக்களை கூறி பிரபலமானவர் இயக்குனர் பாலா இவருடைய திரைப்படம் என்றாலே அது மிகப்பெரிய அளவில் வெற்றி தான் என்று சொல்ல வேண்டும் அப்படி இவர் இயக்கிய முதல் திரைப்படமான சேது திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடித்த விக்ரம் அவர்களுக்கு பேரும் புகழும் பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கர் பச்சான் :- எதார்த்தமான திரை கதையை கொண்டு மக்கள் ரசிக்கும் வகையில் திரை கதையை மையப்படுத்தி இயக்கி பிரபலமானவர் தங்கர் பச்சன். அப்படி இவர் இயக்கிய அழகி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது மேலும் இந்த திரைப்படம் இவருக்கு முதல் திரைப்படம் ஆகும்.
கௌதம் மேனன்:- மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனவர் இயக்குனர் கௌதம் மேனன். இவர் இயக்கிய முதல் படமான மின்னலே திரைப்படம் இன்று வரையிலும் காதலர்களால் ரசிக்கப்படும் காதல் திரைப்படமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.