கண்டிப்பா இத நீங்க செய்யணும் என்ற இயக்குனர்கள்..! ஆள விடுங்கடா சாமி என ஓடிய தனுஷ்..!

dhanush-01
dhanush-01

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ் இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் இந்தி என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

அந்த வகையில் நமது நடிகர் திரைப்படங்களில் கதாநாயகனாக நடிப்பது மட்டுமில்லாமல்  திரைப்படம் இயக்குவது தயாரிப்பது பாட்டு பாடுவது என பன்முக திறன் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நமது நடிகர் தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் மற்றும் திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சொந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இவ்வாறு அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக 3, எதிர்நீச்சல் வேலையில்லா பட்டதாரி விசாரணை போன்ற பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ளார். ஆனால் சமீபத்தில் அவர் தயாரிக்கும் திரைப்படங்கள் படம் தோல்வியை சந்தித்து நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா என்ற திரைப்படத்தை கூட தனுஷ்தான் தயாரித்திருந்தார் ஆனால் இந்த திரைப்படம் சரியான வெற்றியை கொடுக்காமல் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது.

இதனால் சிறிது காலமாக தயாரிப்பு பணியை நிறுத்திவிட்டு நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் நமது நடிகர் இந்நிலையில் இயக்குனர்கள் பலரும் தனுஷிடம் நீங்கள் திரைப்படம் எடுங்கள் என வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் தனுஷுக்கு தயாரிப்பில் ஆர்வம் இல்லாத காரணத்தினால் பாலிவுட் ஹாலிவுட் சினிமா என  பிஸியாக இருந்து வருகிறாராம்.