பொதுவாக ரசிகர்கள் நடிகர்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதை அளவிற்கு அப்படத்தை இயக்கும் இயக்குனர்களுக்கும் முக்கியத்துவம் தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்தவகையில் பல இயக்குனர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்கள். இவர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் இயக்குனர்களும் போட்டி போட்டுக்கொண்டு பல படங்களை இயக்கியுள்ளார்கள்.
அந்த வகையில் தமிழ் திரை உலகில் பிரபல இயக்குனர்களாக ஜொலித்து வருபவர்கள் ஷங்கர், மணிரத்னம்,கௌதம்மேனன்,அட்லி உள்ளிட்டோர் பல ஆண்டுகளாக இயக்குனர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். ஒரு படத்தின் கதை எப்படி இருக்க வேண்டும் என்பதை நியனிப்பவர்கள் இவர்கள் தான்.
அந்தப் படம் தோல்வி அடைந்தாலும்,வெற்றி அடைந்தாலும் முதலில் இயக்குனர்களை சென்றடையும். தற்பொழுது சில தினங்களாக எந்தந்த நடிகர்,நடிகைகள் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள் என்ற லிஸ்ட் இணையதளத்தில் வைரல் ஆனது. இவர்களைத் தொடர்ந்து தற்பொழுது டாப் 5 இயக்குனர்களின் சம்பளம் எவ்வளவு என்று தற்போது வெளிவந்துள்ளது.
1.சங்கர் – ரூபாய் 32 கோடி
2. அட்லி – ரூபாய் 26 கோடி
3. ஏ ஆர் முருகதாஸ் – ரூபாய் 16 கோடி
4. கே எஸ் ரவிக்குமார் – ரூபாய் 5 கோடி
5. மணிரத்தினம் – ரூபாய் 5 கோடி
இந்தப் பட்டியல் தான் தற்போது இணையதளத்தில் வைரலாகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.