தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு இவருடைய காமெடி நடிப்பிற்கு ஈடு இணை எந்த ஒரு நடிகரும் கிடையாது ஏனெனில் அந்த வகையில் வார்த்தைகளால் மட்டும் இல்லாமல் தன்னுடைய உடல் அசைவுகளாலும் காமெடி செய்வதில் வல்லவர் என்றால் அது வடிவேலு தான்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதில் இயக்குனர் ஷங்கருக்கும் வடிவேலுக்கும் ஏற்பட்ட மோதலின் காரணமாக வடிவேலு புதிய திரைப்படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர் மீது இருந்த குற்றச்சாட்டுக்கள் நீங்கியதன் காரணமாக மீண்டும் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் இந்நிலையில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நாய் சேகர் என்ற திரைப்படத்தில் மிக விறுவிறுப்பாக நடித்துவருகிறார்.
அந்த வகையில் இந்த ஆண்டு தன்னுடைய பிறந்த நாள் விழாவை கூட நடிகர் வடிவேலு தன்னுடைய நாய் சேகர் பட குழுவினர்கள் உடன் தான் கொண்டாடி வந்தார் அந்த வகையில் அந்த பிறந்தநாள் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வந்தன.
தொடர்ந்து வடிவேலு அவர்கள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாரி செல்வராஜ் சமீபத்தில்தான் கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார்.
இவ்வாறு இந்த திரைப்பட படப்பிடிப்பு முடிந்த கையோடு உதயநிதியை வைத்து ஒரு திரைப்படத்தை மாரிசெல்வராஜ் இயக்க உள்ளது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள்.