கடந்தாண்டு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற பல மொழிகளில் வெளியாகி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. படம் செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.
அல்லு அர்ஜுன் இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து அசத்தியிருந்தார் அதனால் படம் வெளிவந்து எதிர்பாராத அளவு வசூலை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் சிறப்பாக அமைந்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இதனிடையே இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன.
ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு முன்னணி நடிகை சமந்தா கவர்ச்சி நடந்ததை வெளிப்படுத்தியிருந்தார். புஷ்பா படம் ஹிட்டடிக்க சமந்தாவின் நடனம் முக்கிய பங்கு வகித்தது. இந்தநிலையில் புஷ்பா படம் முதல்பாகம் வெளிவந்தபோதே இயக்குனர் சுகுமார் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகும் என தெரிவித்திருந்தார்.
அதை எடுத்து இரண்டாம் பாகத்திற்கான கதையை இயக்குனர் உருவாக்கி வந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஜூலையில் தொடங்கும் என குறிப்பிடப்பட்டது இந்த நிலையில் இந்த படம் குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது அதன்படி முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த ராஷ்மிகா மந்தனா தான் இரண்டாம் பாகத்திலும் ஹீரோயினாக நடிக்க இருந்தார்.
ஆனால் அவரது கதாபாத்திரம் இரண்டாம் பாகத்தில் அதிகம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இதனால் தற்போது ராஷ்மிகா மந்தனா ரசிகர்கள் பலர் வருத்தத்தில் இருக்கின்றனர். நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தளபதி 66 மற்றும் சில முக்கிய டாப் நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.