பிரபல முன்னணி நடிகர் விசு இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே அந்த காலத்திலே நன்றாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.
அதிலும் குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படத்தை விசு இயக்கிய போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது.
இதனை அடுத்து இவர் 22ம் தேதி மார்ச் 2020 ஆம் ஆண்டு சிறுநீரக செயலிழப்பு காரணமாக திரை உலகை விட்டு மறைந்தார்
இவரது இறுதி கனவாக சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படத்தை இரண்டாம் பாகமாக இயக்குவதுதான். அவர் மறைந்தாலும் அவரது கனவை நினைவாக்க பிக்சர்ஸ் ராஜா இந்த படத்தை தயாரிக்க முன்வந்தார்.
விசுவின் உதவியாளராக இருந்த வி. எல். பாஸ்கர் படத்தை இயக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.இப் படத்திற்காக பரத்வாஜ் இசையமைக்கப் போகிறார் என்றும் சினிமா வட்டாரங்கள் பேசிக்கொண்டு உள்ளார்கள்.
இந்த படத்திற்காக அனல் பறக்கும் வசனங்கள் விசுவின் மகள் லாவண்யா எழுத உள்ளார். இதனையடுத்து சம்சாரம் அது மின்சாரம் இரண்டாம் பாகத்தில் ராஜ்கிரண் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் கசிந்துள்ளது.
இந்தப்படம் கூடிய சீக்கிரம் விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.