தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் இயக்குனர் ஹச். வினோத். தமிழ் சினிமா உலகில் இரண்டு, மூன்று திரைப்படங்களை எடுத்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி அடைந்ததன் காரணமாக டாப் நடிகர்களுடன் கைகோர்த்தார்.
அந்த வகையில் நடிகர் அஜித்துடன் இணைந்து வலிமை என்ற படத்தை எடுத்தார் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்தில் தொடங்கி முடியும் வரை இரண்டு வருடங்கள் ஆனது ஒருவழியாக வலிமை படம் உலக அளவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வெளியானது.
வலிமை படம் முழுக்க முழுக்க ஆக்ஷன்,சென்டிமென்ட், திரில்லர், காமெடி கலந்த திரைப்படமாக உருவாகி உள்ளது அதிலும் குறிப்பாக பைக் சேசிங் காட்சிகள் வேற லெவல். வலிமை படத்தை ஹாலிவுட் தரத்தில் ஹச். வினோத் எடுத்துள்ளார். படம் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
வலிமை படத்திற்கு முன்பாக சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம், நேர் கொண்ட பார்வை ஒன்று போன்ற சிறப்பான படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த மூன்று படங்களையும் தாண்டி தற்போது மீண்டும் அஜித்துடன் மூன்றாவது முறையாக இணைந்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார்.
இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் ஹச். வினோத் வலிமை திரைப்படத்தை இயக்கியதற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற தகவல் வெளியாகி உள்ளது அதன்படி பார்வையில் வலிமை படத்தை இயக்கியிருக்கிறார். இதற்காக இயக்குனர் ஹச். வினோத் வாங்கிய சம்பளம் சுமார் 4 கோடி என கூறப்படுகிறது. ஹாலிவுட் ரேஞ்சுக்கு வலிமை திரைப்படத்தை எடுத்ததற்கு இவ்வளவு சம்பளம் கொடுக்காலம் என ரசிகர்களும் கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.