சினிமா உலகில் இருக்கும் ஹீரோக்கள் என்னதான் தனது திறமையை காட்டினாலும் திறமையான இயக்குனர்கள் கதை சொல்லும் போது அந்த கதையை எப்பொழுதுமே தவற விடக்கூடாது என சொல்லுவார்கள் ஆனால் ஒரு சில காரணங்களால் முன்னணி இயக்குனர்களின் படத்தை தவற விட்டு பின் சில நாட்கள் கழித்து டாப் ஹீரோக்கள் புலம்புவது வழக்கம்..
அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் இரு தூண்கள் ஆக தற்பொழுது பார்க்கப்படுபவர்கள் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுதும் படங்களின் மூலம் போட்டி போட்டுக் கொள்கின்றனர். விஜய் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் அதேபோல அஜித்தும் ஹச் வினோத்துடன் மீண்டும் ஒருமுறை கை கோர்த்து தனது 61வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகின்றார்.
இதனால் இந்த இரண்டு படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது ரசிகர்கள் தாண்டி மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது என்ன என்பதை தற்போது விலாவாரியாக பார்ப்போம். 90 கால கட்டங்களில் பிரபல இயக்குனராக இருந்தவர் விக்ரமன் இவர் ஒரு திறமையான இயக்குனரும் கூட இவரது படத்தில் இணைய பல்வேறு நடிகர் நடிகைகள் காத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் இவர் குறைந்த திரைப்படங்களை திரையுலகில் இயக்கியிருந்தார் அந்த வகையில் இவர் அஜித்தை வைத்து உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தை எடுத்தார் அந்த படம் சூப்பர் ஹிட் விஜய்க்காக பூவே உனக்காக படம் கொடுத்தார் அந்த படமும் பிளாக்பஸ்டர் அதன் பிறகு அஜித் விஜய் உடன் விக்ரமன் படம் பண்ண முயற்சித்தார் ஆனால் அது தோல்வியில் முடிந்தது அது குறித்து பார்ப்போம்.
விஜய்யின் பூவே உனக்காக படத்தை தொடர்ந்து மற்றொரு படத்தை இயக்க ஏற்பாடு செய்தார் ஒரு பாடல் காட்சியும் எடுக்கப்பட்ட நிலையில் விஜய்க்கு ஏதோ ஒரு காரணத்தால் நடிக்க விருப்பமில்லை அந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறார் அதன் பிறகு தான் நடிகர் சூர்யா விஜய்க்கு பதிலாக தேர்வாகி நடித்தார் அந்த படம் தான் உன்னை நினைத்து. இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதேபோல அஜித்துக்கு இன்னொரு படத்தை கொடுக்க முடிவு செய்தார் ஆனால் அந்த சமயத்தில் அஜித்திற்கு விபத்து ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக விக்ரமை நடிக்க வைத்தார் அந்த படம் புதிய மன்னர்கள்.